Other Details


ஸ்ரீஹரி ஜோதிட வாட்ஸ்அப் குழு


2007 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஜோதிட பயிற்சி வகுப்புகளை நடத்தி, பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஜோதிட ஞானம் புகட்டிய ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயத்தின் நோக்கங்கள் செயல்பாடுகள் பயிற்சி தொடர்பான விபரங்கள் மற்றும் நிறுவனம் சார்ந்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள கீழ்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

ஜோதிடம், ஆன்மீகம், பக்தி, தர்ம நெறிமுறைகள், ஸம்ஸ்காரங்கள் தொடர்பான அனேக ஸத்விசயங்களை அறிந்து கொள்வதற்கு நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்ஸ்அப் குழுவில் இணைந்து பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

நமது சனாதன தர்மம் குறிப்பிடும் வாழ்வின் நெறிமுறைகள் தொடர்பாக அறிந்து கொண்டு, வாழ்க்கையை அறவழிப்படி நெறிப்படுத்திக் கொள்ளவும், ஜோதிட சாஸ்திரத்தின் உண்மை தன்மையை அறிந்து கொள்ளவும், தற்போதைய மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்றார் போல ஜோதிட சாஸ்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்பன போன்ற விவரங்களை அறிந்து கொள்ள குழுவில் இணைந்து பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

( குறிப்பு : ஏற்கனவே பயிற்சியில் உள்ள மாணவர்கள் இக்குழுவில் இணைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.)



ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயம் பல நூற்றுக்கணக்கான பேரவை கூட்டங்கள் மற்றும் இலவச ஜோதிடம் முகாம்கள் ஆகியவற்றை நடத்தியுள்ளது. ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயம் நிகழ்த்திய பேரவை கூட்டங்கள் மற்றும் இலவச ஜோதிட முகாம்கள் பற்றிய அறிய கீழ்க்கண்ட இணைய முகவரிக்கு செல்லவும்.


ஜாதக நோட்டுப் புத்தகம்


ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயமானது ஜனன ஜாதகங்களை எழுதித் தரும் வகையில் ஜாதக நோட்டுப் புத்தகம் ஒன்றினை வடிவமைத்து வெளியீடு செய்துள்ளது. மாணவர்களின் கணிதத்திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில், அதாவது பலன் காண்பதற்கான அனைத்து நிலைகளையும் கணிதம் செய்து எழுதும்விதத்தில் ஜாதக நோட்டுப் புத்தகம் அமைந்துள்ளது.

இந்த நோட்டுப்புத்தகம் மாணவர்கள் மட்டுமல்லாது வெளிநபர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஜாதக நோட்டு புத்தகம் தேவைப்படுவோர் நோட்டு ஒன்றுக்கு ரூ.50/- நன்கொடையாக வழங்க வேண்டும். கொரியர் சர்வீஸ் மூலம்பெற, ஒரு நோட்டிற்கு ரூ.10/- கூடுதலாக வழங்க வேண்டும்.

ஜாதக நோட்டுப்புத்தகம் முற்றிலும் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வித்யாலயத்தில் பயிற்சி நிறைவு செய்த மாணவர்கள் இந்த நோட்டுப் புத்தகத்தில் தான் ஜாதகம் எழுதி தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

jathagabook

ஜாதக நோட்டு புத்தகங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய அலைப்பேசி எண்