வித்யாலயத்தை பற்றி

about_img

“தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு”

 

அரும்பாடுபட்டு சம்பாதித்த பொருட்கள் யாவும் தக்கவர்களுக்கு கொடுத்து உதவுவதற்கே என்பது திருவள்ளுவரின் அருள்வாக்கு. முயற்சி செய்து சம்பாதித்த பொருட்களை, பணம் என்ற குறுகிய வட்டத்திற்குள் வள்ளுவர் இந்த குறளில் அடக்கவில்லை. பொருட்கள் என்ற தலைப்பில் அரும்பாடுபட்டுப் பயின்ற கலைகளும் அடங்கும். அத்தகைய கலைகளைத் தக்கார்க்கு கற்றுத் தரும் நோக்கத்தோடும், “ஜோதிடம் அறிந்த மானுடம் செய்வோம்” என்கிற லட்சியத்தோடும், தான் அரும்பாடுபட்டுக் கற்றறிந்த ஜோதிடக் கலையை எல்லோரும் கற்று பயன்பெற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடும் துவங்கப்பட்டதே ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயம். இந்த நிறுவனத்தை தமிழ்நாட்டின் தென்பகுதியில், தேனி மாவட்டத்தில் புண்ணிய நதிகளில் ஒன்றான வைகையின் பிறப்பிடத்தில் அமைந்துள்ள கண்டமனூர் என்கின்ற சிறிய கிராமத்தில் வசித்து வருபவரும், சுமார் 350 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஸ்ரீரங்கநாதப் பெருமாள் திருக்கோவிலின் அர்ச்சகருமான திரு.மீனம். K.S.மணி பட்டாச்சாரியார் அவர்களால் 24.10.2007 ஆம் நாள் துவங்கப்பட்டது.

about_img


2008 ம் வருடம் பிப்ரவரி மாதம் முதல் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டு சீரான இடைவெளியில் புதிய கிளைகளை துவங்கியது. தற்போது தமிழகம் மற்றும் புதுவையில் 100 மையங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. எங்களது நிறுவனத்தில் பயிற்சி நிறைவு செய்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அவரவர் பகுதியில் ஜாதக பலாபலன்களை எடுத்துக் கூறியும், மிகச் சரியான முகூர்த்த நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொடுத்தும் சேவையாற்றி வருகிறார்கள்.

மாணவர்களை தகுநிலைப்படுத்த 5 பாகம் பாடபுத்தகங்கள், மூன்று கையேட்டுப்புத்தகம் மற்றும் ஜாதக கணித பல்லவம் புத்தகங்களைக் கொண்டும், ஜோதிடக் கருத்தரங்கங்கள், பேரவைக்கூட்டங்கள், இலவச ஜோதிட முகாம்களை நடத்தியும், சிறப்புத் தகுநிலையை அடையச் செய்கிறோம். மேலும் மாணவர்கள் ஆய்வு செய்வதற்கும், பலன்கள் வெளிப்படுத்துவற்கும், உதவும் வகையில் கணினி மென்பொருள் மற்றும் நான்கு விதமான மொபைல் செயலிகளையும், வெளியிட்டு சேவையாற்றி வருகிறோம்.


நிறுவனம் செய்து வரும் சமூக சேவைகள்


1. ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள நன்மை பயக்கும் கருத்துக்களை மக்களுக்கு உபதேசித்து அக்கலை மறைந்து விடாமல் இருக்க, வேண்டிய முயற்சிகளை செய்து வருகிறது.

2. மாணவர்களுக்கு உடல்நலம் மனவளம், வாழ்க்கை வளம் ஆகியவற்றை ஏற்படுத்தித் தருகிறது.

3. பேரவைக்கூட்டங்கள் வாயிலாக மாணவர்களின் தனித்திறனை வளர்ப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

4. இலவச ஜோதிட முகாம்களை நடத்தி பொதுமக்களிடையே ஜோதிட விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அக்கலை மறைந்து விடாமல் இருப்பதற்கு பெருமுயற்சி செய்து வருகிறது.

5. வேள்விபூஜைகளை நடத்தி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, உலக நன்மைக்காக பிரார்த்தனைகளையும் செய்து வருகிறது.

6. ஜோதிடக் கருத்தரங்கங்கள் வாயிலாக பொதுமக்களிடையே சாஸ்திரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

7. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களுக்கு பொதுமக்கள் யாத்திரை மேற்கொள்ள வேண்டிய உதவிகளை செய்து வருகிறது.

வித்யாலயத்தின் சில முக்கிய நிகழ்வுகள்



  வ.எண்   தேதி   நிகழ்வுகள்
1 அக்டோபர் 2007 ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயத்தின் தோற்றம்
2 03.02.2008 முதல் பயிற்சி வகுப்புகள் துவக்கம்
3 12.03.2008 முதல் பாக பாடப்புத்தகம் வெளியீடு
4 07.09.2008 முதல் பட்டமளிப்பு விழா, இரண்டாம் பாக பாடப்புத்தகம் வெளியீடு
5 17.05.2009 இரண்டாவது பட்டமளிப்பு விழா
6 19.12.2009
20.12.2009
மூன்றாவது பட்டமளிப்பு விழா, முதல் குருபெயர்ச்சி வேள்வி பூஜை, மூன்றாம் பாக பாடப்புத்தகம் வெளியீடு, ஸ்ரீஹரி ஜோதிடப் பேரவை துவக்க விழா
7 30.05.2010 நான்காவது பட்டமளிப்பு விழா
8 06.12.2010
07.12.2010
5வது பட்டமளிப்பு விழா, இரண்டாம் குருபெயர்ச்சி வேள்வி பூஜை
9 30.06.2011 ஆறாவது பட்டமளிப்பு விழா
10 20.11.2011 ஏழாவது பட்டமளிப்பு விழா
11 16.05.2012
17.05.2012
18.05.2012
மூன்றாவது குருபெயர்ச்சி விழா, ஸ்ரீஹரி நாராயணப் பெருமாள் பிரதிஷ்டை விழா, எட்டாவது பட்டமளிப்பு விழா
12 02.10.2012 ஒன்பதாவது பட்டமளிப்பு விழா
13 25.12.2012 நான்காம் பாக பாடப்புத்தகம் வெளியீடு, இணையதளம் துவக்கம்
14 31.05.2013 பத்தாவது பட்டமளிப்பு விழா, நான்காம் குருபெயர்ச்சி வேள்வி பூஜை, 5ஆம் பாக பாடப்புத்தகம் வெளியீடு
15 09.10.2013 11வது பட்டமளிப்பு விழா
16 19.06.2014 12 வது ஜோதிட பட்டமளிப்பு விழா
17 04.11.2014 13வது ஜோதிட பட்டமளிப்பு விழா
18 14.07.2015 6 வது குருபெயர்ச்சி வேள்வி பூஜை விழா
19 14.07.2015 14 வது ஜோதிட பட்டமளிப்பு விழா
20 31.10.2015 15 வது ஜோதிட பட்டமளிப்பு விழா
21 24.05.2016 16 வது ஜோதிட பட்டமளிப்பு விழா, 7வது நவக்கிரஹ வேள்வி பூஜை விழா
22 24.10.2016 17 வது ஜோதிட பட்டமளிப்பு விழா, ஸ்ரீ ஹரி ஜோதிட மாத இதழ் துவக்க விழா, ஸ்ரீஹரி ஜோதிட மென்பொருள் வெளியீட்டு விழா. 8வது வேள்வி பூஜை விழா
23 14.05.2017 18வது ஜோதிட பட்டமளிப்பு விழா
24 27.10.2017 19 வது ஜோதிடப் பட்டமளிப்பு விழா 9வது வேள்வி பூஜை விழா
25 31.05.2018 20வது ஜோதிட பட்டமளிப்பு விழா
26 26.10.2018 பத்தாவது வேள்வி பூஜை விழா, 21வது ஜோதிட பட்டமளிப்பு விழா மற்றும் மொபைல் ஆப் வெளியீட்டு விழா
27 02.05.2019 22 வது ஜோதிட பட்டமளிப்பு விழா, ஜோதிட களஞ்சியம் மொபைல் செயலி வெளியீடு
28 24.10.2019 23 வது பட்டமளிப்பு விழா, ஆராய்ச்சி நிலை ஜோதிட பயிற்சி துவக்க விழா, விழா மலர் வெளியீட்டு விழா
29 14.05.2020 24-வது ஜோதிடப்பட்டமளிப்பு விழா, நிறுவனத்தின் 4-வது மொபைல் செயலி ஸ்ரீஹரி நாம ஜெப மொபைல் செயலி வெளியீடு
30 10.04.2022 25-வது ஜோதிடப் பட்டமளிப்பு விழா, 12-வது வேள்வி பூஜை
31 06.11.2022 26-வது ஜோதிப்பட்டமளிப்பு விழா, 16-ம் ஆண்டு துவக்க விழா, ஸ்ரீஹரியின் திருமணப் பொருத்தம் புத்தக வெளியீட்டு விழா
32 22.04.2023 27-வது ஜோதிடப் பட்டமளிப்பு விழா, 13-வது வேள்வி பூஜை விழா