Welcome To
Sri Hari Jothida Vidyalayam
Astrology explores the world of divine help to mankind with the help of planets and stars.Through the Vedic Indian Astrology, we can find out the nature and sequence of timing of events.
1. மிகச்சரியான ஜோதிட சாஸ்திரத்தை பொதுமக்களுக்கு போதித்து, ஜோதிட விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சாஸ்திரத்தை பூரணமாக பின்பற்றி தானும் வாழ்ந்து கொண்டு. சமூகத்தில் இருக்கும் நபர்களையும் வாழ செய்வதற்கு மாணவர்களை தகுநிலைப்படுத்துவது.
2. ஆன்மீகமும் ஜோதிடமும் இரு கண்களைப் போன்றது. இதற்கு உயிராக இருப்பது நமது சனாதன தர்மம் ஆகும். இதில் சொல்லப்பட்டிருக்கக் கூடிய வேதம், சாஸ்திரம் மற்றும் இதிகாசங்கள் தொடர்பான விழிப்புணர்வு சமூகத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ள செய்யும் விதமாக செயல்படுவது.
3. கர்ம வினைகளின் படியே ஒவ்வொருவர் வாழ்விலும் நடைபெறும் சுகதுக்கங்கள் ஏற்படுகின்றன. தீதும் நன்றும் பிறர் தர வாரா…, ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று முன்னோர்கள் தெரிவித்த கருத்துக்கு இணங்க, அவரவர் செய்த வினைப்பதிவுகளே அவரவர் பலன்களுக்கு காரணம் என்பதை உணரச் செய்து, அவற்றை எதிர்கொள்ளும் மனோபக்குவத்தை மாணவர்களுக்கும், அவர்கள் மூலமாக பொதுமக்களுக்கும் ஏற்படுத்துவது.
4. ஒவ்வொருவர் வாழ்விலும் நடைபெறும் ஒவ்வொரு விஷயமும் அவரவர் திட்டமிட்டபடி நடைபெறுகிறது என்கின்ற பக்குவமற்ற நிலையை மாற்றி, அனைத்தும் இறைவன் நிகழ்த்துகிறார் அவரின் ஆணைப்படியே அனைத்து விஷயமும் நடைபெறுகின்றன என்கின்ற அடிப்படை ஞானம் அனைவருக்கும் ஏற்படும் விதமாக செயல்படுவது.
5. புகழ், பொருள், மோகம் இவைகளால் கிடைக்கும் இன்பம் தற்காலிகமானது என்கின்ற உயரிய ஞானத்தை மாணவர்களை அடையச்செய்து ஜீவன் முக்தி நிலையை அடைவதே பிறவியின் பயன் என்பதையும் உணரச் செய்து அதற்கு மிக எளிமையான வழி சரணாகதியே என்பதையும் மாணவர்களுக்கு மிக ஆழமாக புகட்டுவது.
6. பாரம்பரிய மிக்க நமது பாரத தேசத்தின் சிறப்புமிக்க பண்பாடு, கலாச்சாரங்களுக்கு பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு அவற்றை முறையாக பின்பற்ற செய்வது.
7. சுய ஒழுக்கமே மனிதனை மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். மேலும் மிகச்சிறந்த சமூக சூழ்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பாகவும் அமையும் ஆதலால், ஒழுக்கம் உயிரை விட மேலானது என்பதை போதித்து மாணவர்களை சுய ஒழுக்கத்தோடு வாழச்செய்வதற்கான அறிவுரைகளை வழங்குவது.
8. ஜீவாத்மா பிறப்பு முதல் இறப்பு வரையிலும் இறப்பைத் தொடர்ந்து ஓர் ஆண்டுகள் வரையும் 40 விதமான சம்ஸ்காரங்கள் நமது சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது அவை தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி நமது சாஸ்திரங்கள் உணர்த்தும் சம்ஸ்காரங்களை பின்பற்ற செய்வது.
9. சாஸ்திரங்களை பின்பற்றுவது ஒரு தனி மனிதனின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடியது என்கின்ற தெளிவை மக்களை உணரச் செய்து, சமூகத்தில் இருக்கும் பொதுமக்களை புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டிருக்கும் சத்தியங்களை பின்பற்றி சாஸ்திரத்தின் வழியில் வாழச் செய்வதற்கான முயற்சி மேற்கொள்வது.
1.To mould the students into a person who will not only lead his life following the tenets of our sasthras absolutely, but also guide the society to follow the correct path by teaching them the genuine Jyothish Sasthra and to bring an awareness about this divine sasthra.
2. Sprituality and Jothisham are like the two eyes of a human being. The life-line for this is our ‘Sanathana Dharma. Our aim is to create awareness among all kinds of people in our society about the Vedas, sasthras and epics which are embodied in our Sanathana Dharma.
3. The fortune or misfortune that occurs in one’s life is purely pre-determined by his ‘Karma’. To make our students and through them the public, to realise that, as our ancestors and scriptures has explained the good or bad are the outcome of the results of our actions in previous janma, which we call as ‘Karma’ and prepare them mentally to face and adapt to those situations.
4. To change the design of the immature thinking that each event happening in one’s life is as per his will and plan and make them realise that everything is happening as per the mandate of the Almighty only.
5. To impart the sublime ‘Gyan’ to the students ,’ that the happiness and pleasure we derive through fame, wealth and lust are all only temporary in nature and to make them realise that attaining the state of liberation from these worldly pleasures, that is ‘Moksha’ is the sole purpose of being born as an human.
6. To save from any
damage, the supreme tradition and culture of Bharat may be subjected to and to follow them
in a proper manner.
7. Self-discipline or virtue alone will place a man in a very high position and it will only
create an ambiance for the development of a moral and disciplined society. To teach and
guide the students to live, keeping in mind that self-discipline or virtue is much more
valuable than anything in life.
8. Our sasthras insisist that, for a ‘Jeevathma’ from birth to death and thereafter a year
following death, there are 40 types of ‘Samskaras’ (Religious Rituals) to be performed at
various stages. Our aim is to create an awareness about the importance of these ‘samskaras’
to the public and habituate them to follow these.
9. To make the public aware of that following the tenets of sasthra truly helps to lead a
happy life and try to make them follow the sublime values and ethics propounded in our Epics
and Mythologies in their way of life.